கர்ப்பமான 11th மாணவி - யார் காரணம் என தெரிந்ததும் இடிந்துபோன பெற்றோர்

சிவகங்கை அருகே வீட்டில் படிக்கவந்த 11-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். பட்டதாரி ஆசிரியரான இவர், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவரது உறவினரான 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், ஆரோக்கியதாஸ் வீட்டில் தங்கி பொதுத்தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

அப்போது மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியிடம் விசாரித்ததில், ஆரோக்கியதாஸ் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், போலீசில் புகாரளித்த நிலையில் ஆரோக்கியதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com