போதையில் வந்த ஆசிரியர்- பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்ததை அறிந்த பெற்றோர், தலைமை ஆசிரியருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலவாய்ப்பட்டி கிராமத்தில், திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்ட முதல் நான்று, நான்காம் வகுப்பு ஆசிரியர் பிரபாகரன் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்ததுடன், தண்ணீர் குழாயை உடைத்துள்ளார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர். போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுவதும், அவரை பணியிடைநீக்கம் செய்வதும்தான் நடவடிக்கையா? என்று கேள்வி எழுப்பிய பெற்றோர், அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Next Story
