Thoothukudi | மார்க் குறைந்ததால் அடித்த ஆசிரியர் - ஹாஸ்பிடலில் மாணவன்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி
#Thoothukudi #Teacher #Student #ThanthiTV Thoothukudi | தேர்வில் மார்க் குறைந்ததால் அடித்த ஆசிரியர் - ஹாஸ்பிடலில் மாணவன்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி பத்தாம் வகுப்பு மாணவரை ஆசிரியர் கம்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஜேசுரதி, மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மாணவரின் தந்தை கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தேர்வு விடைத்தாளில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவரின் முதுகு மற்றும் கைகளில் கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
