குன்னூர் : அமைச்சருடன் தேயிலை தொழிலாளர்கள் வாக்குவாதம்

நீலகிரி மாவட்டம் குன்னுாரில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணி பயன்களை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
குன்னூர் : அமைச்சருடன் தேயிலை தொழிலாளர்கள் வாக்குவாதம்
Published on
நீலகிரி மாவட்டம் குன்னுாரில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணி பயன்களை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். பின்னர் மேடையில் அவர் பேசியபோது, மகேஷ்வரன் என்ற ஒய்வு பெற்ற தேயிலை தொழிலாளி, கூட்டத்தில் இருந்தபடி சில குறைகளை கூறினார். அவரிடம் தன்னை ஏற்கனவே சந்தித்துள்ளீர்களா என அமைச்சர் கேட்டதற்கு, அந்த தொழிலாளி இல்லை என கூறினார். இதையடுத்து, தன்னை நேரில் சந்திக்குமாறு அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து விஜயரத்தினம் என்ற தொழிலாளி, மேடைக்கு நேரடியாக சென்று, தனது மகளுக்கு வேலை கிடைக்கவில்லை என அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை, அதிமுக நிர்வாகிகள் அப்புறப்படுத்த முயன்றதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com