"டி.சி. கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்" - தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு

டி.சி கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
"டி.சி. கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்" - தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு
Published on

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் வேறு பள்ளியில் சேர டி.சி., எனப்படும் மாற்று சான்றுதழ் கேட்கின்றனர். அம்மாணவர்களிடம் ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால் மட்டுமே டிசி தரமுடியும் என பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் தர முடியும் என நிர்பந்திக்க கூடாது என்றும் , தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com