Tasmac | குடிக்க பணம் தராததால் கொலை டாஸ்மாக் கடை முன் நடந்த பயங்கரம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே டாஸ்மாக் கடை முன் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறக, தூசி பகுதியைச் சேர்ந்த கிளி என்கிற யுவராஜ், பாபு, பாலாஜி ஆகிய மூன்று பேரை போலீசார் பிடித்துள்ளனர். மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெல்டிங் தொழிலாளி கண்ணனை அடித்தும் வெட்டியும் கொன்றதாக கைதிகள் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்துள்ளது. கொலையாளிகள் மூவரும் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்