டாஸ்மாக் சம்பவம் - வெளியான வீடியோ ஆதாரம்
மது கடையில் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூல் என புகார்
சிதம்பரம் அருகே வேலகுடி பகுதியில் இயங்கி வரும் அரசு மது கடைகளில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மது பிரியர் ஒருவர் கடைக்கு சென்று 250 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில் ஒன்று கேட்டதற்கு, விற்பணையாளர் ஆறுமுகம் கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார். மது பிரியர் பணத்திற்கு ரசீது கேட்டநிலையில்,நீங்கள் கேட்ட சரக்கு இல்லை என தெனாவட்டாக கூறியும்,மேலும் இங்குமட்டுமல்ல தமிழகம் முழுவதும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது எனவும் விற்பணையாளர் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story
