Wineshop | Coonoor | மதுபாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா - டாஸ்மாக் ஊழியரை பதம் பார்த்த தந்தை - மகன்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் புகுந்து, விற்பனையாளரை தந்தை-மகன் தாக்கிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டதாகக்கூறி தந்தை-மகன் தகராறில் ஈடுபட்டதுடன், இருவரும் சேர்ந்து விற்பனையாளர் பிரேம்குமார் என்பவரை தாக்கினர். இதில் காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சில்வர் ஸ்டார் மற்றும் அவரது மகன் ஆலனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
