"டாஸ்மாக் ஊழல் புகார்..! ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து"

x

டாஸ்மாக் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசிய ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிவதாக குறிப்பிட்டார். டாஸ்மாக் துறை தன் தவறுகளை உணர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்