விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி - பார்த்ததும் குடத்தை தூக்கி கொண்டு ஓடிய மக்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நாமக்கல் அடுத்த புதன்சந்தை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதமடைந்து எண்ணெய் கசிந்தது. இதனையறிந்து அங்கு கூடிய அப்பகுதி மக்கள் குடங்கள், மற்றும் பக்கெட்டுகளை எடுத்து வந்து சமையல் எண்ணெய்யை பிடித்து சென்றனர்.
Next Story