14 நாடுகளில் இருந்து `வேர்களை தேடி,' சிதம்பரத்தில் குவிந்த அயலக தமிழர்கள்

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14 நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்படும் “வேர்களை தேடி“ திட்டத்தின் கீழ், உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரான்ஸ், ஜெர்மனி,கன்னடா, மியான்மர், பிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த, சுமார் 100 அயலக தமிழர்கள் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள, நடராஜப் பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி, முக்குருணிவிநாயகர் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆரம்பித்த இவர்கள், தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளப்போவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்