மாசி மகம் - விமரிசையாக நடந்த மஞ்சுவிரட்டு

x

சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் குறுக்கே செல்ல முயன்ற நபரை போலீசார் தாக்கிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அடுத்த அரளிப்பாறையில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 600 காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இதில், மாடு முட்டியதில் பார்வையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் மஞ்சுவிரட்டில் பங்கேற்ற ஒருவரை போலீசார் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்