கோயிலில் தங்கம், வெள்ளி நகைகளை திருடிய அர்ச்சகர் - கைது செய்த போலீசார்

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான இந்த கோயிலில் தினக்கூலி அடிப்படையில் ஸ்ரீவத்சாங்கன் என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கோயிலுக்கு சொந்தமான 14 கிராம் எடையுள்ள 7 தங்க தாலி, 14 தங்க குண்டுகள் மற்றும் 150 கிராம் எடை கொண்ட வெள்ளி பூணூல் உள்ளிட்டவற்றை திருடி கடையில் விற்பனை செய்துள்ளார். கோயில் நகைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அர்ச்சகர் கொடுத்த நகைகள் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, நகைகள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கோயில் நிர்வாகம் அளித்த புகாரில் அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com