ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்பு : அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்பு : அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்பு : அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சொத்துக்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, இந்து சமய அறநிலையத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள உணவகம் மற்றும் விடுதியை அகற்ற வேண்டும் எனக்கூறி, தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் மெத்தனமாக செயல்பட்ட போலீசாரை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திருவண்ணாமலை சம்பவத்தில் ஆக்கிரமிப்பாளர்களை கைது செய்து, போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com