

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வருகிற 13 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் போட்டி இருந்தால் வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜூ, என். ஆர் இளங்கோ ஆகியோர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், அதிமுக சார்பாக விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.