தமிழகத்தின் ஆறு புதிய மாவட்டங்கள் - விரைவில் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்

புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் ஆறு புதிய மாவட்டங்கள் - விரைவில் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்
Published on

அ.தி.மு.க.வின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதையடுத்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள, அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளையும் மாற்ற கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதேபோல், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் ஆலோசனை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே, தமிழக அரசியல் கட்சிகள், 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி நடைபோடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com