காற்றுடன் பொழிந்த பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ந்த மக்கள்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 2வது நாளாக கனமழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால், ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. புளியம்பட்டி, பனவடலிசத்திரம், தலைவன் கோட்டையிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பலத்த மழை பெய்தது. சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது.
Next Story