"சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.23,465 கோடி நிதி" - தமிழக அரசு கோரிக்கை

சாலை வசதி மேம்பாட்டிற்காக 23 ஆயிரத்து 465 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.23,465 கோடி நிதி" - தமிழக அரசு கோரிக்கை
Published on
சென்னை தலைமை செயலகத்தில்15வது நிதிக்குழு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குண்டாறு, வைகை, மணி முத்தாறு, அக்னியாறு உள்ளிட்ட ஆறுகளை காவிரியுடன் இணைப்பதற்காக, 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழங்கால கோவில்களை புனரமைக்க 400 கோடி ரூபாயும், சாலை வசதி மேம்பாட்டிற்காக 23 ஆயிரத்து 465 கோடி ரூபாயை, ஒதுக்கவும், 15 வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com