வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரிப்பு

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் உள்ளுரில் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரிப்பு
Published on

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு, உருளைகிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், உள்ளுரில் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில், தற்போது இரண்டாம் சீசன் துவங்கி நாளொன்றுக்கு 500 முதல் 600 டன் வரை கிழங்குகள் விற்பனைக்கு வருகின்றன. வெளிமாநில உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பால், உதகை உருளைக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. வெளிமாநில உருளைக்கிழங்கை டன் கணக்கில் பொதுமக்கள் வாங்கி செல்வதால் உள்ளூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com