

தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 33ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 15 லட்சத்து, 65ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 303 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 359 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 2 லட்சத்து 7ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.