தமிழகத்தில் கோலாகலம் களைகட்டிய சித்திரை திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகையாற்றில் உள்ள புஷ்பவனேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவிலில், சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஏராளமான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்

நாகை மாவட்டம் சங்கமங்கலம் சடைச்சிமுத்து காளியம்மன் கோவிலில் காளி திருநடனம் ஆடும் வைபவம் நடைபெற்றது. அப்போது, 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்களின் மேளதாளம் முழங்க நடைபெற்ற பவளக்காளி படுகள நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற தொட்டிச்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்...

X

Thanthi TV
www.thanthitv.com