தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி அவமதிக்கப்பட்டாரா ?
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீல் செஸ் தொடரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலியுடன் கைகுலுக்க, சகவீரரான உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பேக் யாகுபோவ் மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மதரீதியான காரணம் சொல்லப்பட்டாலும், கடந்த ஆண்டு நடந்த மற்றொரு செஸ் தொடரில், மற்றொரு இந்திய வீராங்கனை திவ்யாவுடன் நோடிர்பேக் கைகுலுக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தனது செயல் குறித்து விளக்கமளித்துள்ள நோடிர்பேக், மதரீதியான காரணங்களுக்காவே தான் பெண்களை தொடுவதில்லை என்றும், திவ்யாவுடன் கைகுலுக்கியது தவறு என்றும் பதிவிட்டுள்ளார். நோடிர்பேக்குடன் மோதிய சுற்றில், வைஷாலி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
