

எடப்பாடி காமராஜ்நகரை சேர்ந்த ஸ்ரீதர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஜலகண்டாபுரத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். எடப்பாடி ஆலமரத்துக்காடு அருகே கார் வந்த போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து அனைவரும் காரை வீட்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.