தமிழ் புத்தாண்டு.. அண்ணாமலையார் கோயிலில் தமிழ் பஞ்சாங்கம் வாசித்து சிறப்பு பூஜை
சித்திரை முதல் நாளையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. கொடிமரத்தின் அருகில் உள்ள செல்வ விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீவிசுவாசிவ வருட பிறப்பையடுத்து தமிழ் பஞ்சாங்கத்தினை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சாங்கத்தினை சிவாச்சாரியார்கள் வாசித்தனர்.
Next Story