தமிழகத்தின் முதல் AI குப்பை மேலாண்மை திட்டம் துவக்கம்
தமிழ்நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு குப்பை மேலாண்மை திட்டமானது உதகையில் துவங்கப்பட்டுள்ளது. உதகையில் தினமும் குவியும் 40 டன் குப்பைகளை கட்டுப்படுத்த, நகர்மன்ற தலைவர் வானீஸ்வரி தலைமையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மையில் நவீன மாற்றங்களை உருவாக்கும் திட்டம் தொடங்கபட்டது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் குப்பை கழிவுகள் சேகரிப்பு முதல் மறுசுழற்சி வரை கண்காணித்து திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செய்ய உதகை நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, வரும் நவம்பர் மாதத்தில் முழு செயல்பாட்டிற்கு வரும் என்றும் அதற்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Next Story
