தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை, வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.