அமெரிக்காவை கலக்கிய தமிழக மாணவர்கள் – தோல்வியே இல்லாத வெற்றி !

x

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டியில், வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி- யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 55 நாடுகளில் இருந்து சிறந்த பள்ளி அணிகள் பங்கேற்ற நிலையில், 250-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒரு வாரம் நடைபெற்ற இந்த போட்டியில், துவக்கம் முதலே எந்த நாடோடும் தோல்வியை சந்திக்காமல் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்