Kovai Student Issue | தமிழகத்தையே நடுங்கவிட்ட கூட்டு பலாத்கார வழக்கு - இறுதி தீர்ப்பு நாள்?
#kovaistudentcase #kovaistudentissue கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் தீர்ப்பு கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. கோவை பிருந்தாவன் நகரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகிய மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்திற்குள்ளேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது சுமார் 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்றுடன் சாட்சி பதிவுகள் முடிவடைந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இன்று இறுதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
