"19 ஆண்டுகளில் பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள்" - கல்வித் துறை அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"19 ஆண்டுகளில் பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள்" - கல்வித் துறை அறிவிப்பு
Published on

தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல், 2019 வரை பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் எண்ணிக்கை மற்றும் அதன் மீதான நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முருகேஷ் என்பவர் பள்ளிக் கல்வித் துறையிடம் விவரம் கேட்டிருந்தார்.

* அதற்கு உரிய பதில் அளிக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் அவர் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் பள்ளி கல்வித் துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

* அப்போது, கடந்த 19 ஆண்டுகளில் 171 பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடந்திருப்பதாக ஆவணங்களை கல்வி அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

* இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு உரிய பரிந்துரை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் ஜெயக்குமார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com