சீனாவுக்கு உதவிய தமிழக மோசடி கும்பல் | தட்டி தூக்கிய அதிகாரிகள்

x

சர்வதேச சிம் பாக்ஸ் நெட்வொர்க் - உளவுத்துறை நடவடிக்கை

இணையவழி குற்றப்பிரிவு முக்கிய உளவுத்துறை நடவடிக்கை மூலம் சர்வதேச சிம் பாக்ஸ் நெட்வொர்க் முறியடிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றப் பிரிவு தலைமையகத்திலுள்ள புலனாய்வுக் குழுவின் மற்றொரு மைல்கல்லாக, தமிழ்நாட்டில் செயல்படும் சர்வதேச சிம் பாக்ஸ் நெட்வொர்க்கை கண்டுபிடித்து உள்ளனர். சீனாவை சேர்ந்த மோசடியாளர் உதவியால் தமிழகம் முழுவதும் சிம் பாக்ஸ் மோசடி கும்பலுக்கு உதவிய நபர்கள் கைது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல உயரிய சோதனைகள் நடத்தப்பட்டு அதன் விளைவாக தஞ்சாவூர், இராமநாதபுரம், மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் சென்னை மற்றும் மதுரையில் இயக்கப்பட்ட 14 உயர் திறன் கொண்ட கியூக்டெல் சிம் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிம் பாக்ஸ் என்பது சர்வதேச இணையவழி மோசடி கும்பல்களிலிருந்து இணையவழியாக தொலைபேசி தொடர்புகளை எளிதாக்கும ஒரு சாதானமாகும்.


Next Story

மேலும் செய்திகள்