தமிழகத்தில் பரவலாக மழை

சென்னை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் பரவலாக மழை
Published on

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சேத்துப்பட்டு,பெசன்ட்நகர், வடபழனி, கிண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

* திருவாரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்தது. திருவாரூர் நகர் பகுதி, நன்னிலம், திருத்துறைப் பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

* தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், அண்ணா நகர் பகுதியில் சலவை கூடத்தை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால்,அங்கு பணிபுரியும் சலவை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சிதம்பரம் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், பரங்கிப்பேட்டை,சின்னூர், சி.புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 4-வது நளாக, இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com