தமிழக - கர்நாடக எல்லையில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அமைதி நிலவுவதால் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
தமிழக - கர்நாடக எல்லையில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கம்
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக -கர்நாடக எல்லையில் அமைதி நிலவுவதால் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், தங்கள் மாநில கொடிகளை வாகனங்களில் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோதனைச் சாவடியில் அந்த கொடிகளை அகற்றுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது. தமிழக - கர்நாடக எல்லைகளில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com