எல்லா விதத்திலும் அசத்தும் தமிழ்நாடு - வெளியான புதிய டேட்டா
சாலை விபத்து வழக்குகள் 8.78 சதவீதமாக குறைவு
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சாலை விபத்து உயிரிழப்பு வழக்குகள் 8.78 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
கடந்தாண்டு 10 ஆயிரத்து 792 சாலை விபத்து வழக்குகளில், 11 ஆயிரத்து 268 பேர் உயிரிழந்ததாகவும், இந்த ஆண்டு 9 ஆயிரத்து 844 விபத்து வழக்குகளில், 10 ஆயிரத்து 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 702 வழக்குகளும், சிக்னலை மீறியதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 970 வழக்குகளும் மேலும் வாகனங்களை ஒட்டும்போது செல்போன் பேசியதாக 2 லட்சத்து 40 ஆயிரத்து 285 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 883 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 36 லட்சத்து 39 ஆயிரத்து 7 வழக்குகளும், இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 608 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ரோந்து வாகனங்களால் 14 ஆயிரத்து 354 நபர்கள் விபத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 6 ஆயிரத்து 804 நபர்கள் உயிர்காக்கும் நேரமான கோல்டன் அவரில் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்தது.
