

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் சேரும் முன், இந்து மதத்தில் பிறந்த தாம், அந்த மதத்தை தொடர்ந்து பின்பற்ற உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், தற்போதைய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்கவில்லை என்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாரயணன், சேசஷாயி அமர்வு, மனுவுக்கு நவம்பர் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கமாறு தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.