தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு..
மனுக்கள் மீதான நடவடிக்கை - மாத அறிக்கை அளிக்க உத்தரவு அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாத அறிக்கை அளிக்க வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைகளைவு
மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மூன்று நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் வாயிலாக குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்த பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களைத் தவறாது பின்பற்றுமாறும்
மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அனைத்துத் துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறைகளைவு மனுக்களைப் பதிவு செய்திட, குறைகளைவு மனுப்பதிவேடு ஒன்றினை இவ்வரசாணையின் பின்இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு பராமரிக்க வேண்டும் . அப்பதிவேட்டில், அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்பதிவேட்டினை மாத இறுதியில் அவ்வலுவலக தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு காண ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாளில் மனுவைப் பெற்றதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், ஒரு மாதத்திற்குள் குறையை களைய வேண்டும். குறை களைவு மனுக்களைக் கையாளுதல் குறித்த நடைமுறைகள், அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க அனைத்துத் துறைச் செயலாளர்கள், ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
குறை களைவு மனுப்பதிவேட்டினை அரசாணையின் பின் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு பராமரிக்க வேண்டும். குறை களைவு மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண ஆவண செய்ய வேண்டும்.
