TN Govt| தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு.. கேட்டா ஒட்டுமொத்த தமிழகமும் செம சர்ப்ரைஸாகும்
#tngovt #cmvijay #tnregistrationdepartmentlatestnews சொத்து பதிவு செய்தவர்கள் இனி ஆவணங்களைப் பெற சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை உரிமையாளர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பும் புதிய திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மையப்படுத்தப்பட்ட அச்சக வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிரத்யேக காகிதத்தில் சொத்து ஆவணங்கள் அச்சிடப்படும். இதற்கான பாதுகாப்புக் காகிதங்கள் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும். தொடர்ந்து, அச்சிடப்பட்ட ஆவணங்கள் இந்திய அஞ்சல் துறை மூலம் ஸ்பீட் போஸ்டில், சொத்து வாங்கியவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் ஆவணங்களை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்களை தடுக்கும் வகையில் ஹாலோகிராம், மைக்ரோ பிரிண்டிங், வரிசை எண் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன. இதன் மூலம் சொத்து பதிவு நடைமுறை எளிமைப்படுத்தப்படுவதுடன், பொதுமக்களின் அலைச்சலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
