ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மெக்கான்ஷ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள், இரவு 11 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் படகில் இருந்த கண்ணாடி சிதறியதில், ஜேசு என்ற மீனவரின் கண் பாதிக்கப்பட்டதாக சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள், பாதிக்கப்பட்ட அந்த மீனவரை மதுரைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவலை, படகை இயக்கிய மீனவர் டல்வின் ராஜ் தெரிவித்துள்ளார். தற்போது இரட்டை மடி வலை பயன்பாடு அதிகரித்துள்ளதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மீனவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்