கற்றலில் சிறந்து விளங்குகிறது, தமிழகம்" குடியரசுத் தலைவர் புகழாரம்

அறிவாற்றலிலும், கல்வியிலும் தமிழகம் தலை சிறந்து விளங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
கற்றலில் சிறந்து விளங்குகிறது, தமிழகம்" குடியரசுத் தலைவர் புகழாரம்
Published on

அறிவாற்றலிலும், கல்வியிலும் தமிழகம் தலை சிறந்து விளங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார் .பின்னர் விழாவில் பேசிய அவர், பழங்காலம் முதல் அறிவாற்றலிலும், கல்வியிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குவதாக குறிப்பிட்டார்.கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய செழுமையை பறைசாற்றுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது என்றும் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை வழங்கியதில் வியப்பு கிடையாது எனவும் பேசினார்.மேலும், நவீன கல்வி முறையை கொண்டு வருவதற்காக புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், நம்முடைய பாரம்பரியம் மற்றும் செழுமையை உள்ளடக்கியதாக புதிய கல்வி கொள்கை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து நாட்டிலேயே முதல்முறையாக அண்ணா பல்கலைக்கழகம் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது பாராட்டதக்கது என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com