தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.க்கு ரூ. 5 லட்சம் அபராதம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி டாக்டர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.க்கு ரூ. 5 லட்சம் அபராதம்
Published on
இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், இதுபோன்ற படிப்புகளை நடத்த அனுமதித்தால், அதில் படித்து முடித்தவர் அந்த பிரிவில் நிபுணர் என மக்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார் . மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் டிப்ளமோ படிப்புகளை வழங்க பல்கலைக்கழகத்துக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை மதிக்காமல் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, பல்கலைக்கழகத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com