"ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகம்"- மக்களவையில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்பி வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.
"ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகம்"- மக்களவையில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
Published on

கடந்த 2006 ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10 புதிய வழித்தடங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் தலா ஆயிரம் வீதம்10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளதாக மக்களவையில் பேசிய அவர் குற்றம் சாட்டினார். தமிழக மேம்பாட்டுக்கு மிக அடிப்படையான இந்த திட்டங்களின் நிலை என்ன என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் நிதி ஒதுக்கீட்டை பார்த்தால், ரயில்வே திட்டங்கள் முடிவடைய இரண்டு தலைமுறை ஆகும் எனவும் அவர் கூறினார்.

இதுபோல, ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 500 பயணிகள் ரயில் தனியார் மயமாக்கப்படும் நிலை உருவாகி வருவதாகவும், இது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடியும் என்றும் வெங்கடேசன் எச்சரித்துள்ளார். அரசாங்கமே விவசாயிகள் மீது அக்கறை இல்லாத நிலையில், எந்த தனியார் நிறுவனம் விவசாயிகள் நலனுக்காக கிசான் சரக்கு ரயிலை இயக்கு​ம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.​

X

Thanthi TV
www.thanthitv.com