

மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு 335 கோடி ரூபாய் வழங்க மத்திய கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்னதாகவே விடுவிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.