தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
Published on

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர் கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டு மென்று, திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டு மென, திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X

Thanthi TV
www.thanthitv.com