பார் கவுன்சில் புதிய தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு - துணைத்தலைவராக கார்த்திகேயன், பிரபாகரன் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பார் கவுன்சில் புதிய தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு - துணைத்தலைவராக கார்த்திகேயன், பிரபாகரன் தேர்வு
Published on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பால் கனகராஜ், அமல்ராஜ், பிரபாகரன், விடுதலை, கே.பாலு, மோகன கிருஷ்ணன், உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், தலைவர், துணைத்தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான, தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இவரிடம் 4 வாக்குகள் வித்யாசத்தில் பால் கனகராஜ் தோல்வியடைந்தார். துணைத்தலைவராக கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com