தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை
Published on

சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் புதிய மாவட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட அதிகாரி லலிதா, எஸ்பி ஸ்ரீ நாதா, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்றனர். மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்கு கீழ் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க 2 டிஎஸ்பிகளுக்குக் கீழ் 14 காவல் நிலையங்கள், இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் மயிலாடுதுறை பகுதி மக்களின் தனி மாவட்ட கனவு நனவாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com