குவைத்திலிருந்து தமிழர் வெளியிட்ட வீடியோ.. காண்போரை கலங்க வைக்கும் பேச்சு

குவைத்தில் வேலைக்குச் சென்று சிக்கிய கணவரை உயிருடன் மீட்டுத்தரக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார். மாதவச்சேரியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் பரமக்குடியில் டிராவல்ஸ் நடத்திவரும் ராமச்சந்திரன் என்பவர் மூலம் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தினமும் 16 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாக வேதனையுடன் அவர் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அவரை மீட்கக்கோரி மனைவி மனு அளித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com