தமிழ் மிகவும் தொன்மையான மொழி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தமிழ் மிகவும் தொன்மையான மொழி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Published on

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா ஏ.சி.சண்முகம் தலைமையில் ஏ.சி.எஸ். கன்வென்சனில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

பின்னர் சிறப்புரை ஆற்றும்போது அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் பேசி ஆரம்பித்தார். தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்றும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குவது சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com