

இதன்படி, நெல்லை, மதுரை, தஞ்சை, விழுப்புரம், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் முதல்கட்டமாக நடப்பாட்டில் அறிமுகமாகிறது. இந்த ஐந்து மாவட்டங்களில் 2,500 ஒருங்கிணைந்த விவசாய குழுக்கள் உருவாக்கப்பட்டு குழுவுக்கு இரண்டு விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். வேளாண் துறை, கால்நடை துறை, மீன்வள துறை ஆகியவை மூலம் நடப்பாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.