தாம்பரத்தில் 40 நிமிடங்களில் நடந்த அதிசயம் - வைரல் வீடியோ
தாம்பரம் அருகே மாநகர பேருந்தில் காணாமல்போன 5 வயது சிறுவனை, போக்குவரத்து கழக ஊழியர்கள் 40 நிமிடங்களில் கண்டறிந்து, அவரது குடும்பத்திடம் சேர்த்தனர். தாம்பரம் கிழக்கு ரயில் நிலையம் அருகே, 5 வயது சிறுவன் 31G வழித்தட மாநகர பேருந்தில் தவறுதலாக ஏறியுள்ளார். இதுகுறித்து ஓட்டுநர் வீரமணி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சிறுவனை தவறவிட்ட அவரது குடும்பத்தினரை கண்டறிந்தனர். உடனடியாக பேருந்தை கேம்ப் ரோட்டில் நிறுத்திய போக்குவரத்து கழக ஊழியர்கள், போலீசார் முன்னிலையில் சிறுவனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஊழியர்களின் இந்த செயலுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Next Story
