நாட்டையே உலுக்கிய மெகா மோசடி - தமன்னா, காஜல் அகர்வாலுக்கு தொடர்பா?
கிரிப்டோகரன்சி மோசடி குறித்த வழக்கில், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலிடம் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடெங்கும் பலரிடமும் ஆசைவார்த்தை கூறி, சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல் கிரிப்டோ கரன்சி மோசடி செய்த விவகாரத்தில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், கோவையில் 2 பேரை கைது செய்தனர். மேலும், 10 பேரை தேடி வருகின்றனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இந்த கும்பல் நடத்திய விழாவில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றதாக தெரியவருகிறது. ஆகவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை அடிப்படையில், மோசடி கும்பலுடன் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? நிகழ்ச்சிகளில் ஏன் கலந்து கொண்டார்கள்? அல்லது இவர்களும் முதலீடு பங்குதாரரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
