``நல்லா பாத்துக்கோங்க.. இதான் எங்க ஸ்கூலோட நிலவரம்’’ - மட்டையான அரசு ஆசிரியர்.. வைரல் வீடியோ
அரசு பள்ளியில் மதுபோதையில் கிடந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளைய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் மது போதையில் கிடந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியராக பணியாற்றி வரும் 45 வயதான ஆரோக்கியராஜ் மிதமிஞ்சிய போதையில் பள்ளியில் தகராறில் ஈடுபட்டதோடு, பள்ளியிலேயே படுத்து கிடந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆசிரியரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
Next Story
